தமிழகத்தில் உணவகங்களில் இன்று முதல் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
5-ம் கட்டமாக ஜுன் 30 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் சில கட்டுப்பாடுகளுடன் உணவகங்களை திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, உணவகங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, உணவகங்கள் துரிதகதியில் தயாராகி வருகின்றன. சென்னையில் உணவகங்களில், கிருமிநாசினி தெளிப்பது, சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
Discussion about this post