11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 6 பாடங்களில் இருந்து 5 பாடங்களாகவும் குறைக்கப்பட்டு, 600 மதிப்பெண்களுக்கு பதில் 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும் என்றும், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் வேதியியம், உயிரியல் பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறை 2020- 2021ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post