இந்தியாவில், மேலும் 36 ஆயிரத்து 571 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கேரள மாநிலத்தில் மட்டும் 24 மணி நேரத்தில், 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 150 நாட்களுக்கு பிறகு, சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 63 ஆயிரமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்று பாதித்த மேலும் 540 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், கேரள மாநிலத்தில் மட்டும் 197 பேர் என்றும் சுகாதாரத்துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்து வரும் நிலையில், கேரள மாநிலத்தில் மட்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது, தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் அச்சத்தை அதிகரித்து இருக்கிறது. கேரளாவில் இதுவரை 37 லட்சத்து 66 ஆயிரத்து 573 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி, 19 ஆயிரத்து 246 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Discussion about this post