இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து, இன்று இரவு முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அதிபர் சிறிசேன அறிவித்துள்ளார்.
ஈஸ்டர் தினமான நேற்று இலங்கையில் தேவாலயங்கள், ஹோட்டல்கள் மற்றும் மக்கள் கூடுமிடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் 300 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இன்று இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வர மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து இலங்கையில் அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்தநிலையில், அதிபர் சிறிசேன தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இன்றிரவு முதல் அவசர நிலையை பிரகடனம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனிடையே, தாக்குதலுக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு பொறுப்பேற்று இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
Discussion about this post