காஷ்மீரில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் 70 வாகனங்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 2 ஆயிரத்து 500 பேர் சென்று கொண்டு இருந்தனர். அப்போது பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற 2 பேருந்துகள் மீது பதுங்கி இருந்த தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதனிடையே தாக்குதலில் உயிரிழந்த வீரர்களில் 38 பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
காஷ்மீரில் புல்வாமா மாவட்டம் அவந்திபுராவில் நடத்தபட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 4க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 2 தமிழர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அதில் ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடைசியாக தனது மகனுடன் நேற்றுமுன் தினம் தொலைப்பேசியில் பேசியதாக காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த கோவில்பட்டியைச் சேர்ந்த சுப்ரமணியனின் தந்தை தெரிவித்துள்ளார்.