விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு திட்டம் கட்டாயம் என்பதை மாற்றலாமா? என மாநில அரசுகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது.
மத்திய அரசு செயல்படுத்தி வரும் பயிர் காப்பீடு திட்டத்தில், பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதற்கான இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனங்கள் கொடுக்கின்றன. அதற்காக காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையை விவசாயிகளும், மத்திய, மாநில அரசுகளும் கூட்டாக செலுத்துகின்றனர்.கடன் வாங்கிய விவசாயிகள், பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேருவது கட்டாயம் ஆகும். மற்ற விவசாயிகள், விருப்பத்தின்பேரில் சேர்ந்து கொள்ளலாம். இந்த நிலையில், இத்திட்டத்தை எல்லா விவசாயிகளுக்கும் விருப்பத்தின் அடிப்படையிலானதாக மாற்றுமாறு சில மாநில அரசுகளும், விவசாய அமைப்புகளும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, நேற்று நாடாளுமன்றத்தில் இதுபற்றிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய வேளாண் இணையமைச்சர் புருஷோத்தம் ருபாலா, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம், விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தை விருப்பத்தின் அடிப்படையிலானதாக மாற்றலாமா? என்பது குறித்து கருத்து கேட்டுள்ளதாகவும், இந்த கோரிக்கையை பரிசீலித்து வருவதாகவும், கூறினார்.
Discussion about this post