ஜி.ஆர்.பி ஹெல்ப் ஆப் மூலம் குற்றச்சம்பவங்கள் தடுக்கப்படும் -சைலேந்திர பாபு

ரயில் நிலையங்கள் அனைத்திலும், விரைவில் சி.சி.டி.வி கேமிராக்கள் பொறுத்தப்படும் என ரயில்வே காவல்துறை கூடுதல் இயக்குனர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ரயில்வே இருப்பு பாதை காவல்துறை சார்பில், ஜி.ஆர்.பி.ஹெல்ப் செயலி அறிமுக நிகழ்ச்சி விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரயில்வே காவல்துறை கூடுதல் இயக்குனர் சைலேந்திர பாபு கலந்து கொண்டு, பொதுமக்களிடையே ஜி.ஆர்.பி.ஹெல்ப் செயலியை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரயில் பயணிகளின் பாதுக்காப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ரயிலில் திருட்டு, கொள்ளை, பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவித்தால், அடுத்த 2 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எந்த மாநிலத்தில் இருந்தாலும் இந்த செயலியை பயன்படுத்தலாம் என்றும் சைலேந்திர பாபு தெரிவித்தார்.

 

Exit mobile version