அமெரிக்காவில் 5 வயது மகனை கொன்றுவிட்டு, பேஸ்புக் நேரலையில் ராணுவ வீரர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஜோவோனி மெக்லண்டன் ஜூனியர், இவருக்கு வயது 33. இவர் தனது 27 வயது காதலி மற்றும் 5 வயது மகனுடன் வசித்து வந்தார்.
கடந்த 3-ம் தேதியன்று தன்னுடைய தாய்க்கு போன் செய்த ஜோவோனி, நான் என்னுடைய மகனையும், மனைவியையும் கொன்றுவிட்டேன் என கூறிவிட்டு போனை வைத்துவிட்டான்.
இதற்கிடையில் பேஸ்புக் பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்த ஜோவோனி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை கேள்விப்பட்டதும் உடனடியாக அவருடைய வீட்டிற்கு விரைந்த பொலிஸார், உள்ளே சென்று பார்த்தபோது ஜோவோனி மற்றும் அவருடைய 5 வயது மகன் இறந்த நிலையில் கிடந்தனர்.
அதேசமயம் அவருடைய காதலி, கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட பொலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் அறிந்த ஜோவோனி உடன் பணிபுரிந்த நண்பர், மனஅழுத்ததில் இப்படி செய்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார்.
Discussion about this post