பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ‘friendship’ படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரும், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காகவும் விளையாடி வரும் ஹர்பஜன் சிங், தமிழ் ட்வீட்களால் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர். சென்னை அணி விளையாடும் போட்டிகளின் போதும், தமிழ்நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளின் போதும் இவர் ட்விட்டரில் பதிவிடும் தமிழ் ட்வீட்கள் வைரலாக பரவும்.
நேற்று கீச்சு,சினிமா கதாபாத்திரம்,இணைய தொடர்.இன்று #SeantoaStudio #CinemaaStudio தயாரிக்கும் #FriendShip படத்தின் நாயகன்.#தமிழ் மக்களுக்கு நன்றி.திருக்குறள் டூ திரைப்பயணம் எல்லாம் சாத்தியப்படுத்தியது என் #தலைவர் #தல #தளபதி சின்னாளப்பட்டி சரவணன்-@ImSaravanan_P அசத்துவோம் @JPRJOHN1 pic.twitter.com/Z5pePt7R72
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 2, 2020
இந்நிலையில் நடிகர் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், வெப் சீரிஸ் ஒன்றில் நவீன திருவள்ளுவராகவும் நடித்து வரும் ஹர்பஜன் சிங் அடுத்து ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
இந்த படத்திற்கு ‘friendship’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை இரட்டை இயக்குநர்கள் ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா தயாரித்து இயக்குகின்றனர். இது தொடர்பான ட்வீட் ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். விரைவில் படக்குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post