சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த காவல்துறையினர், 53 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் விடுதியில் சிலர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த விடுதியில் நடத்திய அதிரடி சோதனையில் 3 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. ஒருவர் தப்பியோடிய நிலையில், ராகுல் ஜெயின், தினேஷ் குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன், 3 மடிக்கணினி மற்றும் 53 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post