தமிழகத்தில் சீன பட்டாசு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் புகையில்லா தீபாவளியைக் கொண்டாட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் நடவடிக்கையால் சீன பட்டாசுகளின் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
சென்னையில் காற்று மாசு மற்றும் புகையைக் கட்டுப்படுத்த நடமாடும் காற்று கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், இதன்மூலம் காற்று மாசு கண்காணிக்கப்படும் என்றும் அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.
விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாட, அரசு சார்பில் கொடுக்கப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post