உசிலம்பட்டியில் மாட்டுப் பண்ணை வைத்து விவசாயி ஒருவர் வருவாய் ஈட்டி வருகிறார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஏழுமலை கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. விவசாயம் செய்து வந்த இவர், போதிய மழை இல்லாததால், விவசாயத்தை கைவிட்டு மாட்டுப்பண்ணை வைத்துள்ளார். முதலில் 2 மாடுகளை வளர்த்துவந்த குருசாமி, நாளடைவில் 60 பசுமாடுகளை சேர்த்து பண்ணை வைத்து பராமரித்து வருகிறார். பசுமாடுகளுக்கு சீமை புல், சோளம், கம்பு உள்ளிட்டவைகளை உணவாக வழங்கிவருகிறார். பண்ணை வைத்து வருவாய் ஈட்டிவரும் குருசாமி, 10க்கும் மேற்பட்டோருக்கு வேலை வழங்கியுள்ளார். மாட்டு பண்ணை மூலம் தினந்தோறும் காலை,மாலை இரு நேரங்களில் 10க்கும் மேற்பட்ட பால் கேன்களில் ஆவின் பால் சென்டருக்கு அனுப்பி வைக்கவுள்ளார். இதன்மூலம் நல்ல லாபம் கிடைப்பதாக மாட்டுபண்ணை நடத்தி வரும் குருசாமி கூறுகிறார்.
Discussion about this post