மார்கழி மாதப் பிறப்பையொட்டித் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாரத்தில் பல்வேறு ஊர்களில் மாடு விடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
செங்கத்தை அடுத்த கீழ்ப்பாலூரில் மார்கழி மாத பிறப்பையொட்டிக் காளை மாடு விடும் விழா நடைபெற்றது. இதில் 500க்கு மேற்பட்ட காளை மாடுகள் பங்கேற்றுச் சீறிப் பாய்ந்தன. 1000க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை மடக்கிப் பிடித்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தனர்.
இதேபோல், காரப்பட்டு, கடலாடி, மேல்சோழங்குப்பம் எனப் பல்வேறு ஊர்களில் காளை மாடு விடும் விழா நடைபெற்றது. இந்த விழாவானது ஆண்டுதோறும் மார்கழி மாதம் தொடங்கித் தைப்பொங்கல் வரை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
Discussion about this post