இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி உருமாறிய கொரோனாவுக்கு எதிராக செயல்படும் திறன் பெற்று இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கிய போது பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் கோவாக்சின் உருமாறிய கொரோனா பாதிப்புகளை தடுப்பது தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆராய்ச்சியின் முடிவில் பிரிட்டன் கொரோனா, பிரேசில் கொரோனா, தென்னாப்பிரிக்கா கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் திறன்பட செயல்படக்கூடியது என தெரியவந்துள்ளது.
இதனை தெரிவித்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்தியாவின் சில பகுதிகளில் கண்டறியப்படும் இரட்டை உருமாறிய கொரோனா பாதிப்பையும் கோவாக்சின் தடுக்கக்கூடிய ஆற்றல் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Discussion about this post