குற்றாலம் மற்றும் ஐந்தருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, அருவிகளில் சுற்றுலா பயணிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், குற்றாலம் மற்றும் ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. வெள்ளப்பெருக்கால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. 2 நாட்களுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு குறைந்ததால், குற்றாலம் மற்றும் ஐந்தருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, ஏராளமானோர் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
Discussion about this post