விழுப்புரத்தில் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு சிறை சென்ற வழக்கில், பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட 362 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2013 விழுப்புரம் ரயில் நிலையம் அருகே பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், அந்த கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பளிப்பு அளிக்கப்பட்டது.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் அனந்தராமன், கணேஷ் குமார் உள்ளிட்ட 362 பேரை விடுதலை செய்து விழுப்புரம் முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்தி தீர்ப்பளித்தார்.