சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே பதினேழு வயது இளம் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பாச்சேத்தியை அடுத்துள்ள கொத்தங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் வயது 32. இவருக்கு ஏற்கனவே திருமணமானமாகி குழந்தை இருப்பதாக கூறப்படும் நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அதே கிராமத்தை சேர்ந்த 17 வயது பெண்
ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகக் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் திருப்பாச்சேத்தி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் திருப்பாச்சேத்தி போலீசார் வெங்கடேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வெங்கடேஸ்வரன் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி செம்மல் குற்றம்சாட்டப்பட்ட வெங்கடேஷ் வரனுக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 2500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மைனர் பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post