நீதிமன்ற உத்தரவு எதிரொலியால், பண்ருட்டியில், 200க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பேனர்களை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
தமிழகம் முழுவதும் டிஜிட்டல் பேனர்கள் அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமையில், நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் இணைந்து நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பேனர்களை அகற்றினர். வரும் காலங்களில் எந்த ஒரு பேனர்களும் வைக்க அனுமதி இல்லை என்று தெரிவித்த அதிகாரிகள், மீறி பேனர் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
Discussion about this post