நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் எல்லை வரையே இயக்கப்படுகின்றன. மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல தொழிற் சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாத நிலையில், கர்நாடகா வேலைநிறுத்தம் காரணமாக அந்த மாநிலத்திற்கு செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் முன்னெச்சரிக்கையாக ஓசூர் வரையே இயக்கப்படுகின்றன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாக கர்நாடகா செல்லும் பேருந்துகள் எல்லையான புளிஞ்சூர் சோதனைச் சாவடி வரையே இயக்கப்படுகிறது. இதனால், சாம்ராஜ்நகர், மைசூரு, கொள்ளேகால், பெங்களுரு உள்ளிட்ட நகரங்களுக்கு போதிய பேருந்துகள் கிடைக்கவில்லை என பயணிகள் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post