நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு, கடந்த 6 மாதங்களுக்கு பிறகு வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு, கடந்த 6 மாதங்களுக்கு அதிகரித்து வந்தது. கடந்த 13ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 378 கோடி டாலர் சரிந்து, 44 ஆயிரத்து 736 கோடி டாலராக அந்நிய செலாவணி இருப்பு உள்ளது. அதே போல், கடந்த சில வாரங்களாக அதிகரித்து காணப்பட்ட தங்கத்தின் கையிருப்பு தற்போது வீழ்ச்சியடைந்து, மதிப்பீட்டு வாரத்தில் தங்கத்தின் இருப்பு 153 கோடி டாலர் சரிந்து, 2 ஆயிரத்து 947 கோடி டாலராக உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Discussion about this post