சேலம் மாவட்டம், கருமந்துறை மலை கிராமங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 3 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வாழப்பாடி அருகே மலை உள்ள அடிவாரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கள்ளத்துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சேலத்தில் உள்ள மலை கிராமங்களில் சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கிகள் புழக்கம் அதிகளவில் இருப்பதாக காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கானீகேர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து இன்று கருமந்துறை மலை கிராமங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
புதர் மறைவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 நாட்டு துப்பாக்கிகள் அப்போது பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த மக்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post