கோவை சிங்காநல்லூரில் 35ஆண்டுகளுக்கு முன்பு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்பில் உள்ள அனைவரும் ஒப்புதல் கடிதம் கொடுத்தபின் புதிய குடியிருப்பு கட்டித்தரப்படும் எனத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை சிங்காநல்லூரில் 1984ஆம் ஆண்டு கட்டப்பட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் குடியிருப்பு பகுதிகளில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இப்பகுதியில் 960 வீடுகள் உள்ளதாகவும், புதிய வீடுகள் கட்டும் திட்டத்துக்குக் கிட்டத்தட்ட 700 பேர் ஒப்புதல் கடிதம் கொடுத்து விட்டதாகவும் தெரிவித்தார். மீதமுள்ள 200 பேரும் ஒப்புதல் கடிதம் கொடுக்கும் போது வீட்டு வசதி வாரியத்தால் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் எனத் தெரிவித்தார்.
Discussion about this post