3 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டையின் விலை 15 காசுகள் குறைக்கப்பட்டு 3 ரூபாய் 35 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல் மண்டலத்தில் 3 ரூபாய் 65 காசுகளாக விற்பனை செய்யப்பட்ட முட்டையின் விலை கடந்த 20 ஆம் தேதி 15 காசுகள் குறைத்து விற்பனை செய்யப்பட்டன. இந்த நிலையில் மேலும் 15 காசுககள் குறைக்கப்பட்டு 3 ரூபாய் 35 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கோழி பண்ணையாளர்கள் கூறினர். பள்ளிகள் விடுமுறை காரணமாக சத்துணவு முட்டைகள் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பதால், விலை குறைப்பு செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். வரும் வாரங்களில் முட்டை விலை நிர்ணயம் செய்வது குறித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post