கொரோனா வைரஸ் பரவல் மேலும் வேகமெடுத்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே நான்கு லட்சத்தை தாண்டிய நிலையில், பலி எண்ணிக்கை ஐந்து லட்சத்து 8 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் மேலும் வேகமெடுத்துள்ளதாகவும், எனினும் நிலைமை இன்னும் மோசமடையவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸை ஒழிக்க அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் பொது செயலாளர் டெட்ராஸ் அதனோம் கேட்டுக் கொண்டுள்ளார். பல நாடுகள் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டாலும், கொரோனா வைரசின் தாக்கம் வேகமெடுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நெருக்கடி நிலை முடிவடைந்துவிட வேண்டும் என நாம் விரும்புகிறோம் என குறிப்பிட்டுள்ள அவர், இப்போதைக்கு இது முடிவடைய வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.
Discussion about this post