சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை நடைபெறுவதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் பல நாடுகள் கொரோனா தொற்றுக்கு எதிராக போராடி வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பு, சோதனை நிலைகளில் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மருந்தின் பாதுகாப்பை உறுதி செய்வது, மருந்தின் தரம் மற்றும் உரிய நெறிமுறைகளை பின்பற்றுதல் ஆகியவைகளும் முக்கியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து, ஐ.சி.எம்.ஆர். மற்றும் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை பரிசோதனை செய்ய சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐசிஎம்ஆர் கொரோனா சிகிச்சையில் பாதுகாப்பு, இந்திய மக்களின் நலன் ஆகியவற்றுக்கே மற்ற அனைத்தையும் விட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post