கொரோனா தொற்றுக்கும், கோழி இறைச்சி, முட்டை உண்பதற்கும் தொடர்பில்லை என கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோழி இறைச்சி, முட்டை, இதர கோழி உணவுப் பொருளை உண்டால் கொரோனா பரவும் என்ற தவறான செய்தியை, சமூக ஊடகங்கள் மூலம் ஒருசிலர் பரப்பி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கோழி, முட்டை இறைச்சி சாப்பிட தயக்கம் காட்டுவதாக தெரியவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வதந்திகள் மூலம் மக்கள் புரத தேவையினை இழப்பது ஒருபுறமிருந்தாலும், கோழி வளாப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நோய் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு தும்மல், சளி போன்றவற்றில் வெளிவரும் நீர்த்துளிகள் மற்றும் இவை படர்ந்துள்ள பொருட்களை தொடுவதாலும் மட்டுமே பரவுகிறது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள கால்நடை பராமரிப்புத்துறை, தயக்கமில்லாமல் அனைவரும் முட்டை மற்றும் கோழி இறைச்சியினை உட்கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது.
Discussion about this post