கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து 29 நபர்கள் கடலூர் மாவட்ட ஏ.அகரம் கிராமத்திற்கு வந்துள்ளனர். இதனையறிந்த கிராம நிர்வாக அலுவலர் பசீர் 29 நபர்களின் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடு என்ற ஸ்டிக்கர்களை ஒட்டியதுடன், அவர்களை பரிசோதனைக்காக அழைத்து சென்றுள்ளனர். பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 13 நபர்களில் ஒருவரான மணிமாறன் என்பவர் தான் தனிமைப்படுத்தபட்டதற்கு, கிராம நிர்வாக அலுவலர் பஷீர் தான் காரணம் என்று கூறி, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கிராம நிர்வாக அலுவலர் பஷீர் திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
Discussion about this post