கேரளாவில் கொரோனா பாதிப்பு எதிரொலியால் சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. கேரளாவில், 22 பேருக்கு கொரானா பதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வணிகவளாகங்கள், சுற்றுலாத்தலங்கள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் பெரும்பாலும் வீட்டிலேயே முடங்கியுள்ளதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது.
புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கோட்டயத்தில், படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் வராததால், அப்பகுதியை மக்கள் நடமாட்டமின்றி காணப்படுகிறது. கொச்சியில் உள்ள படகு குழாமுக்கு சுற்றுலாப் பயணிகள் வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. மேலும், வணிக வளாகங்கள், திரையரங்குகள் கடைகள் போன்ற இடங்களிலும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
Discussion about this post