டெல்லியில் கொரோனா தொற்று எதிரொலியால், உச்சநீதிமன்றத்தில் முக்கிய வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவாமல் கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகளை சில நாட்களுக்கு மூட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தநிலையில், உச்சநீதிமன்றத்தில் அனைத்து அமர்வுகளும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் மட்டுமே செயல்படும் என்றும், அதிக மக்கள் கூடுவதைத் தடுப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post