இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 166ஆக அதிகரித்துள்ளது. மாநில வாரியாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை தற்போது பார்க்கலாம். ஆந்திராவில் ஒருவரும், டெல்லியில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட 12 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹரியானாவில் வெளிநாட்டை சேர்ந்த 14 பேர் உட்பட 17 பேரும், கர்நாடகாவில் 14 பேரும், கேரளாவில் வெளிநாட்டு பயணிகள் இருவர் உட்பட 27 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் வெளிநாடுகளை சேர்ந்த 3 பேர் உட்பட 45 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் கொரோனா வைரசால் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் ஒருவரும், தெலங்கானாவில் வெளிநாடுகளை சேர்ந்த 2 பேர் உட்பட 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சண்டிகரில் ஒருவர், ஜம்மு-காஷ்மீரில் 4, லடாக்கில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட் மற்றும் மேற்குவங்கத்தில் தலா ஒருவர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post