கர்நாடக மாநிலத்தில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

கர்நாடக மாநிலத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, வெளிநாடுகளில் இருந்து வந்த ஆயிரத்து 48 பேருக்கு முதற்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களில் 446 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டதாக கூறினார். அவர்களில் 389 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளதாகவும், எஞ்சியவர்களின் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ள 4 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எடியூரப்பா கூறியுள்ளார்.

Exit mobile version