ஜப்பான் கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயணிகள் கப்பலில், 355 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் இருந்து ஜப்பானின் யோகோஹாமா நகருக்கு சொகுசு கப்பல் புறப்பட்டது. இந்த கப்பலில் உள்ள பயணிகள் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதால் துறைமுகத்தில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கப்பலில் உள்ள 355 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சர் கட்சுனோபு கடோ தெரிவித்துள்ளார். கப்பலில் உள்ள ஆயிரத்து 219 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 355 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Discussion about this post