உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 லட்சத்து 64 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், நோய் தொற்றில் இருந்து 9 லட்சத்து 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். கொரோனா வைரசால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கும் அமெரிக்காவில், இதுவரை 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஸ்பெயினில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 29 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இத்தாலியில் ஒரு லட்சத்து 99 ஆயிரம் பேரும், பிரான்சில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஜெர்மனியில் ஒரு லட்சத்து 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் ஒரு லட்சத்து 57 ஆயிரம் பேருக்கும், துருக்கியில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானில் பாதிப்பு எண்ணிக்கை 91 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் 87 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் நேற்று புதிதாக 3 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 82 ஆயிரத்து 836ஆக உள்ளது.
Discussion about this post