போலந்து நாட்டில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப் பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இத்தாலியை தொடர்ந்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
தற்போது போலந்து நாட்டிலும் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனிக்கு சென்றுவிட்டு நாடு திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக போலந்து சுகாதாரத்துறை அமைச்சர் லுகாஸ் சுமோகி தெரிவித்துள்ளார். ஜிலோ கோரா பகுதியில் வசிக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போலந்தில் முதன்முதலில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளதால் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு முனைப்புடன் ஈடுபட்டுள்ளது.
Discussion about this post