இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 983 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு, கொரோனா பாதிப்பு 85 ஆயிரத்து 975 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 31 ஆயிரத்து 667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16 ஆயிரத்து 999 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில் 27 ஆயிரத்து 654 பேரும், குஜராத்தில் 20 ஆயிரத்து 70 பேரும், ராஜஸ்தானில் 10 ஆயிரத்து 599 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் 10 ஆயிரத்து 536 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 9 ஆயிரத்து 401 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, மேற்குவங்கம், கர்நாடகா, பீகார் போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே, இந்தியாவில் இதுவரை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 95 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 135 ஆக உயர்ந்துள்ளது.
Discussion about this post