சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் சார்ஸ் வகையைச் சேர்ந்த புதிய கொரோனோ வைரஸ் மக்களிடையே பரவி வருகிறது. சீனாவின் 23 மாகாணங்களில் கொரோனா நோய்தொற்று பரவி உள்ள நிலையில், வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க 10 நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு தற்போது வேகமாக பரவி வருகிறது. சளி மூலம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரை பறிக்கும் இந்நோய்க்கு நேற்று முன்தினம் 17 பேர் பலியாகி இருந்த நிலையில், நேற்று பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரித்தது. மொத்தம் 23 மாகாணங்களில் வைரஸ் பரவி இருப்பதாகவும், வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஆயிரத்து 72 பேரிடம் பரிசோதனை நடந்து வருவதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தங்கியிருந்து மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படித்து வரும் இந்திய மாணவர்களில் பலர், விடுமுறைகாலம் என்பதால் நாடு திரும்பி விட்டனர். இந்த நிலையில், பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தில், குடியரசு தின விழா கொண்டாடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post