சீனாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்களின் மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவை அமெரிக்கா சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முகக் கவசங்கள், மருத்துவர்களுக்கான ஆடைகள், பரிசோதனை கருவிகளின் தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சீனாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள், மருத்துவ உபகரணங்களை சொந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடை விதித்துள்ளது. தங்கள் நாட்டுக்கு தரம் வாய்ந்த உபகரணங்கள் அவசியம் என்பதால், சீனா இத்தடையை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க நிறுவனங்கள் தயாரித்த உபகரணங்களை ஏற்றுமதி செய்ய ஒப்புதல் கிடைக்காததால், அவை தேங்கியுள்ளன. கொரோனா வைரஸ் விவகாரத்தில் பரஸ்பரம் வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவின் இந்நடவடிக்கை அமெரிக்காவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post