கொரோனாவால் பாதிக்கபட்ட காஞ்சிபுரம் நபர் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ்!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபர் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட கட்டாய பரிசோதனைகளின் முடிவுகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் குணமாகி இருப்பதைக் காட்டுவதாகவும், அவர் அடுத்தகட்ட சிகிச்சை நடவடிக்கைகளுக்கு பிறகு, இன்னும் ஓரிரு நாளில் மருத்துவமனையில் இருந்து  டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இது ஒன்றும் அதிசயம் இல்லை என்பதையும், தமிழக சுகாதாரத்துறையின் கடுமையான கண்காணிப்பு மற்றும் சிசிகிச்சை முறைகள்தான் இதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version