தமிழகத்தில் 6 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு கொரோனா ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கொரோனா நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 3 ஆயிரத்து 698 களப் பணியாளர்கள் மூலம் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, தஞ்சாவூர், வேலூர், கோவை, விருதுநகர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில், நேற்று வரை சுமார் ஒரு லட்சத்து 82 ஆயிரம் வீடுகளில், 6 லட்சத்து 88 ஆயிரத்து 473 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக சுகதாரத்துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Discussion about this post