தமிழகத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்ட புள்ளி விவரப்படி, தமிழகத்தில் 34 ஆயிரத்து 841 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். 73 ஆயிரத்து 326 பேர் 28 நாட்கள் கண்காணிப்பை நிறைவு செய்துள்ளனர். இதுவரை 17 ஆயிரத்து 835 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில்16 ஆயிரத்து 452 பேரின் ரத்த மாதிரிகளின் முடிவுகள் வெளிவந்துள்ளன. ஆயிரத்து 383 பேரின் ரத்த மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1267 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 68 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 15 ஆக அதிகரித்துள்ளது.
Discussion about this post