தென் ஆப்ரிக்காவில் தற்போது பரவி வரும் கொரோனாவின் புதிய பரிணாம வைரசான ‘நியோகோவ்’ அதிக பாதிப்பையும், இறப்பையும் ஏற்படுத்தக் கூடும் என்று கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவின் வூகான் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
மனிதர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிய கொரோனா தொற்று உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்தாண்டு நவம்பர் மாதம் தென் ஆப்ரிக்காவில் கொரோனா தொற்றில் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளில் பரவி மனிதர்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், தென் ஆப்ரிக்காவில் வவ்வால்களிடையே புதிய கொரேனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நியோகோவ் என பெயரிடப்பட்டுள்ள புதிய வைரஸ், கடந்த 2012-ம் ஆண்டு, மத்திய கிழக்கு நாடுகளில் பரவிய மெர்ஸ் வைரசை போன்று தாக்கும் திறனும்,
தற்போதைய கொரோனா வைரசை போல, வேகமாக பரவும் தன்மையும் கொண்டது என்றும், சீனாவின் வூகான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இரு வைரஸ்களின் கலவையாக உள்ள நியோகோவ், மூன்றில் ஒருவரை உயிரிழக்க வைக்கவும் என்றும், அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளனர்.
மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வகையில் நியோகோவ் வைரஸ் உள்ளதா? என்பது போன்ற தரவுகள் இல்லை என்றும், ஆய்வுக்கு பின்னரே வைரசின் வீரியம் குறித்து தெரிய வரும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Discussion about this post