உலகம் முழுக்க கொரோனா நோய் வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் அதன் தாக்கம் கட்டுக்குள் இருப்பதாகவே கருதப்பட்டது. தமிழகத்தில் நேற்று வரை 6பேருக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில், இன்று தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் “ஸ்பெயினிலிருந்து வந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியனது, அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார்”என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் 8950 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post