சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தை கடந்துள்ளது.
அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 83 சதவீதம் பேரும், தண்டையார்பேட்டையில் 80 சதவீதம் பேரும், திரு.வி.க. நகரில் 77 சதவிகிதம் பேரும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதேபோல், தேனாம்பேட்டை மண்டலத்தில் 75 சதவிகிதம் பேரும், அண்ணாநகரில் 74 சதவிகிதம் பேரும், அடையாறு, பெருங்குடி மண்டலங்களில் 73 சதவிகிதம் பேரும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். ஆலந்தூர், வளசரவாக்கத்தில் 72 சதவிகிதம் பேரும், சோழிங்கநல்லூர், மாதாவரம், மணலி மண்டலங்களில் 71 சதவிகிதம் பேரும் குணமடைந்தனர். சென்னை மாநகராட்சி பகுதிகளில் 55 ஆயிரத்து 156 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 18 ஆயிரத்து 616 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post