இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு, லட்சம் பேரில், 7.1 என்ற விகிதத்தில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரசால் 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் விகிதம் ஒரு லட்சத்தில் 60 பேர் என்ற அளவில் உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், ஒரு லட்சம் பேரில் 7.1 என்ற விகிதத்தில், பாதிப்பு விகிதம் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டதால் நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும், வெளியே செல்லும் போது முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை சுத்தமாக வைப்பது போன்றவற்றை அனைவரும் கடைபிடிப்பது அவசியம் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Discussion about this post