கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை100-ஐ நெருங்கியுள்ளது
கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை100-ஐ நெருங்கியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
((GFX IN)) சீனாவில் உருவான ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் 151 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 31 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் 19 பேரும், ஹரியானாவில் 14 பேரும், டெல்லியில் 7 பேரும், தெலங்கானாவில் 2 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், வரும் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பூங்காக்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் பூடான் மற்றும் வங்கதேசத்தின் சர்வதேச எல்லை மூடப்பட்டுள்ளது
Discussion about this post