கொரோனா வைரஸ் பாதிப்பு: பள்ளி, கல்லூரிகளை கால வரையறையின்றி மூட இத்தாலி அரசு உத்தரவு

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இத்தாலியில் அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் காலவரையறையின்றி மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலால் பல்வேறு உலக நாடுகள் தொடர் உயிரிழப்பை சந்தித்து வருகின்றன. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸுக்கு அந்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும் வைரஸ் பரவியுள்ள நிலையில், பல்வேறு நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அந்த வகையில், இத்தாலியில் மட்டும் கொரோனா வைரஸுக்கு 72 பேர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரத்து 500 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இத்தாலியில் அனைத்து பள்ளி கல்லூரிகளையும் கால வரையறையின்றி மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version