இங்கிலாந்து ராணி கமிலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி ராணி கமிலா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். இந்த சூழலில் ராணி கமிலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. 75 வயதான ராணி கமிலா கொரோனா தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post