கொரோனா வைரஸ் புதிய மரபணு மாற்றம் எடுத்துள்ளதாகவும், இது 10 மடங்கு அதிகம் பரவும் தன்மை உடைய வைரஸாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மலேசியாவில் 45 பேர் அடங்கிய குழு ஒன்றிடம் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில், 3 பேரிடம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரபணு மாற்றத்தால் உருவாகியுள்ள இந்த வைரஸுக்கு, டி614டி என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து மலேசியா திரும்பி, 14 நாட்கள் தனிமைபடுத்திக் கொள்ளாமல், விதியை மீறி வெளியே சுற்றிய நபரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் புதிய மரபணு மாற்றம் எடுத்துள்ளதால், இப்போது கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசி ஆய்வுகள் பலனளிக்காது என மலேசிய பொது சுகாதார இயக்குநர் அச்சம் தெரிவித்துள்ளார். இதனிடையே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இந்த வைரஸ் அதிகம் காணப்படுவதாகவும், ஆனால், இதனால் நோய்த் தொற்றின் தீவிரம் அதிகரிக்காது எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
Discussion about this post