சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 106ஆக அதிகரித்துள்ளது. புதிதாக ஆயிரத்து 300 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் வுகான் நகரின் விற்கப்படும் சுகாதாரமற்ற இறைச்சியில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சீனாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸுக்கு 26 பேர் மரணம் அடைந்து உள்ளனர்.
இதனால் வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 106ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், நேற்று 2 ஆயிரத்து 300 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், புதிதாக மேலும் ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 600ஆக அதிகரித்துள்ளது.
Discussion about this post