தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால், பல மணி நேரம் காத்திருக்கும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை தொடர்கதையாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே தடுப்பூசி கிடைக்காத நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் பணிகள் தொடங்கியது.
அவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில், சுமார், 300-க்கும் மேற்பட்டோர் குவிந்து வரும் நிலையில், 100 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மற்றவர்கள் தடுப்பூசி கிடைக்காமல் ஏமாற்றமடையும் நிலை உருவாகியுள்ளது.
இதேபோன்று, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், தடுப்பூசிக்காக பல மணி நேரம் காத்துக் கிடக்கும் மக்கள், ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்லும் நிலை தொடர்கிறது.
20-ல் இருந்து 30 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுவதாகவும், ஆனால்,100 பேருக்கு போடப்படுவதாக கணக்கு காட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது
Discussion about this post